×

நிலக்கடலை வரத்து குறைவால் கடலை எண்ணெய் விலை ‘கிடுகிடு’

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் நிலக்கடலை வரத்து குறைவால், கடலை எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் நிலக்கடலை பருப்பு மூட்டைக்கு ரூ.700 அதிகரித்துள்ளது. இதனால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.50, கடலை புண்ணாக்கு மூட்டைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு (80 கிலோ) (அடைப்பிற்குள் கடந்த வார விலை) - ரூ.7,000 (6,300), கடலை எண்ணெய் (15 கிலோ) - ரூ.2,250 (2,200), கடலை புண்ணாக்கு (100 கிலோ)  - ரூ.4,800 (4,500).
கடந்த 5 வாரங்களாக பாமாயில் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. நடப்பு வாரத்தில் கடலை எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து, பாமாயில் டின்னுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 15 கிலோ பாமாயில் ரூ.1,250 (1,245) என விற்பனையானது.

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: உளுந்து (100 கிலோ)  - ரூ.6,000, லயன் உளுந்து  - ரூ.6,200, பர்மா உளுந்து  - ரூ.6,500, உளுந்தம்பருப்பு நாடு  - ரூ.9,500, உளுந்தம்பருப்பு லயன்  - ரூ.9,000, பர்மா உளுந்தம்பருப்பு  - ரூ.9,000, உளுந்தம்பருப்பு (தொளி)  - ரூ.8,000. பாசிப்பயறு  - ரூ.8,500, பாசிப்பருப்பு லயன்  - ரூ.11,000, துவரை லயன்  - ரூ.6,500, துவரம்பருப்பு லயன்  - ரூ.8,500,  துவரம்பருப்பு உடைசல்  - ரூ.8,200. கடலைப்பருப்பு  - ரூ.6,000, நாடு மல்லி (40 கிலோ)  - ரூ.3,500, லயன் மல்லி   - ரூ.2,700, பொரிகடலை(55 கிலோ) -  ரூ.3,600, ரங்கூன் மொச்சை  - ரூ.6,000,  வத்தல் (குண்டூர்) குவிண்டால்  - ரூ.14,000 வத்தல் (நாடு) குவிண்டால்  - ரூ.11,500 முதல் ரூ.13,000, முண்டு வத்தல் குவிண்டால் - ரூ.11,000 முதல் 12,500 வரை என விற்பனையானது.

Tags : Groundnut, peanut oil
× RELATED எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!!